2,153 காவலர்கள் பணியிடமாற்றம் முதல்.. போதைப்பொருளுடன் சீரியல் நடிகை கைது வரை.!
இன்று நடைபெறும் அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிடுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராயப்பேட்டையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சீரியல் நடிகை எஸ்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான சின்னத்திரை நடிகை எஸ்தர், திரைத்துறையினருக்கு போதைப் பொருள் சப்ளை செய்தாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.