LIVE : ஐபிஎல்லில் இன்றைய ஆட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!
ஐபிஎல்லில் இன்று 2 ஆட்டங்கள் முதல் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை கைது உள்ளிட்ட பல்வேறு செய்திகளில் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கு ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இன்றைய தினம் எந்த 2 அணிகள் ஜெயிக்க போகுது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
கோவையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஐ.பி.எல். போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் போலீஸார் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கைது செய்தவர்களிடம் ரூ.1.09 கோடி பணம், 12 செல்போன்கள், 2 கார்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.