இன்று முதல் 27-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வாக்கு சேகரிப்பு தீவிரம்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் களை கட்டியுள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுவதோடு, வாக்கு சேகரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றுடன் பிரச்சாரம் நிறைவு:
இந்த சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதன்படி, அனைத்து கட்சி மற்றும் நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் யாரும் தேர்தல் நடைபெறும் தொகுதியில் இருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை:
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 27-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடும் நடவடிக்கை:
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…