இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின்பதாக தமிழக முதல்வர் மக்களின் வாழ்வாதாரம் கருதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்கனவே அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் பொழுது கொரோனா தாக்கம் குறைவாகவுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து துணிக்கடைகளும் குளிர்சாதன வசதியின்றி திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதுடன், வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…