இன்று முதல் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி!
இன்று முதல் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மளிகை கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ளதால் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மளிகை, பலசரக்கு, காய்கறி மற்றும் இறைச்சி, மீன் விற்பனை செய்யக்கூடிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்,
- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce ) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம் .
- இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.