இன்று முதல் அனைத்து திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி…!

இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்-6-ம் தேதி வரை அதாவது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் இன்று முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும் என்றும், திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025