Live : வானிலை நிலவரம் முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரை!

கனமழை நிலவரம் முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது வரை இன்றயை முக்கிய செய்திகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

LIVE

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24-மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. அதைப்போல, 2026 தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான வியூகங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு.

டிசம்பர் 17-ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது

1 of 1
பால முருகன்

கருணாநிதி குடும்பம் மன்னர் குடும்பமா? – இபிஎஸ்

  • கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். அதன்பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முடி சூட்டிக்கொண்டார். இப்போது ஒரு வாரிசை கொண்டு வந்து முடி சூட்டிக்கொள்ள துடிக்கிறார்கள்.
  • பால முருகன்

    18-ஆம் தேதி இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

  • கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிபேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
  • பால முருகன்

    இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    டிச 17 நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    பால முருகன்

    ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து அணி

  • முதல் இன்னிங்ஸில் 143 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்ட நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 340 ரன்கள் முதல் இன்னிங்ஸில் 143 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்ட நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 340 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
  • பால முருகன்

    இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பேட்டை , விழுப்புரம் , கடலூர் , புதுச்சேரி , மயிலாடுதுறை , காரைக்கால் , நாகப்பட்டினம் , திருவாரூர் , அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில்  டிச.16 முதல் 20 வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் டெல்டா வெதர்மென் ஹேமச்சந்தர் தகவலை தெரிவித்துள்ளார்.
  • பால முருகன்

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்

  • அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • பால முருகன்

    மழை தொடங்கப்போகுது

  • டிசம்பர் 16 ஆம் தேதி (நாளை இரவு) முதல் மழை தொடங்கும்.20-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என டெல்டா வெதர்மென் ஹேமச்சந்தர் தகவலை தெரிவித்துள்ளார்.
  • பால முருகன்

    அதிமுக பொதுக்குழு – 750 பேருக்கு சைவ உணவு

  • தம்ரூட் அல்வா, மோர் மிளகாய், சாம்பார், வத்தக் குழம்பு, தக்காளி ரசம், முட்டைகோஸ் + பீன்ஸ் பொறியல், பருப்பு வடை, அப்பளம்,, ஊறுகாய், புடலங்காய் கூட்டு, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, வெள்ளை சாதம், உருளைக்கிழங்கு பொறியல், தயிர், பருப்பு பாயாசம் என தடபுடலாக உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.
  • பால முருகன்

    தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்

  • சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 3,500 அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ள நிலையில், 10,000 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.
  • பால முருகன்

    EVKS.இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை!

  • காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை செய்ப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • பால முருகன்

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர்

  • கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி தண்ணீர் திறந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது.
  • மணிகண்டன்

    சுட சுட தயாராகும் உணவுகள்

  • இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கூட்டத்திற்கு வருகை தருபவர்களுக்கு உணவும் தயார் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, 8,000 பேருக்கு அசைவ உணவுகளும், 2,000 பேருக்கு சைவ உணவுகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அசைவ உணவில் சிக்கன், மட்டன், மீன், 65 எனப் பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்