Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…நேபாள் நிலநடுக்கம் வரை!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நேபாளம் திபெத் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் வரை இன்றயை செய்திகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இரங்கல் தீரமானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று (ஜனவரி 8 ) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசவிருக்கிறார்கள். 11ம் தேதி முதல்வர் பதிலுரை அளிப்பார். அத்துடன் கூட்டம் நிறைவு பெறுகிறது.
நேபாளம் திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 129 -ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், 130 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.