சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள், என பலரும் பேரவை வளாகத்திற்கு வருகை தந்துள்ளனர். சட்டப்பேரவைக்கு வருகை தரவுள்ள ஆளுநர் ரவி தனது உரையை முதலில் ஆங்கிலத்தில் படிப்பார். அதை தொடர்ந்து அதன் தமிழ் மொழியாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படாததற்கான சர்ச்சையும் சட்டப்பேரவையில் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைத்துறையில் இசை புயல் என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தன்னுடைய 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு :
எனக்கு வாக்களித்தால் பிரியங்கா காந்தி கன்னம் போல சாலைகள் அமைப்பேன் என கூறிய டெல்லி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி வீட்டில் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
அண்ணாமலை பதிவு :
கள்ளக்குறிச்சி விஷசாராயம் வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு, திமுக அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
GBU ரிலீஸ் தேதி :
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10இல் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னையில் HMPV :
கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
நேரடி ஒளிபரப்பு :
தமிழக சட்டப்பேரவை நிகல்வுகளை மக்கள் நேரடியாக காணும் படி அமைக்கப்பட்ட நேரலையை நிறுத்த கூடாது. சட்டமன்ற விவாதங்களை மக்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும் என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
திமுக போராட்டம் :
தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாளை திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு :
உள் இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பாக சென்னை எழும்பூரில் அருந்ததியர் அமைப்பினர் பேரணி நடத்தினர்.
முதலமைச்சர் கண்டனம் :
தமிழக அரசின் உரையை இந்தாண்டும் ஆளுநர் வாசிக்காமல் மரபை மீறி இருப்பது சிறுபிள்ளை தனமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இசைப்புயலுக்கு அண்ணாமலை வாழ்த்து
உலக அளவில், இசையால் நம்மை எல்லாம் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், நிறைந்த புகழுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
யார் அந்த சார்?
இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை தொடங்கவுள்ள நிலையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை முன்வைத்து யார் அந்த சார்? என்று அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர்.
முதல்வர் வருகை
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
இபிஎஸை விமர்சித்த டிடிவி
பழனிசாமி திருந்துவார் என நம்பிக்கை இல்லை எனவும், அவர் அதிமுகவை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார் எனவும் திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வருகை
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார்.