LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வானிலை அப்டேட் முதல் இன்றயை முக்கியமான செய்திகள் கீழே நேரலையில் கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. உதாரணமாக நேற்று தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்று காலை விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக அதிகமான மழை தென்காசி மாவட்டம் சிவகிரியில் 110 மி.மீ., பதிவாகியுள்ளது. தற்போது சேலம், சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு 52 சதவீதம் வரி போடுகிறது. அதனால், நாமும் இந்தியப் பொருட்களுக்கு வரி போடுகிறோம். ஆனால், அவர்கள் போடுவதை விட பாதி, அதாவது 26 சதவீதம் மட்டுமே போடுகிறோம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025