Live : நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதல்…அமித்ஷா விவகாரம் வரை!
வானிலை தொடர்பான தகவல் முதல் அமித்ஷா பேசிய விவகாரம் வரை இன்றயை நாளின் முக்கிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது தமிழ்நாடு விசாகபட்டினத்தில் இருந்து 430 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா – தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுப்படுத்தி பேசியதற்கு இன்னும் எதிர்ப்புகள் நிற்காமல் தொடர்ச்சியாக அவருடைய பேச்ச்சை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. சென்னையில் காங்கிரஸ் சார்பாக அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நெல்லையில் மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடைபெறுகிறது.