LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!

இன்றயை அரசியல் செய்திகள் முதல் சினிமா செய்திகள் வரை முக்கியமான நிகழ்வுகள் கீழே விவரமாக நேரலையாக கொடுக்கப்பட்டு வருகிறது.

tamil live news

சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்களை’ முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் மிகவும் குறைந்த விலையில் ஜெனரிக் உள்ளிட்ட மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படவுள்ளன. முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் இன்று கூடுகிறது டெல்லி சட்டப்பேரவை. நாளை துணைநிலை ஆளுநர் சக்சேனா உரையாற்ற உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிப்ரவரி (24), 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் டெல்லி சட்டப்பேரவை கூடுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்