நெல்லை மேயர் கொலை சம்பவம் முதல் குற்றவாளி கைது வரை – காவல்துறையின் எப்படி செயல்பட்டது!
திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன் குற்றவாளியாக கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றவாளியை காவல்துறை எப்படி கைது செய்தது என்று பார்க்கலாம்.
நெல்லை மாநகர திமுக வில் கடந்த 1990 ஆண்டு வரை பிரபலமாக இருந்த பெண்மணி சீனியம்மாள். திமுகவின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த இவர், தற்போது திமுக ஆதி திராவிட அணியின் தலைவராக இருந்து வருகிறார். அப்போது, நெல்லையில் சாதாரணமாக திமுக உறுப்பினராக இருந்த உமாமகேஸ்வரி கணவர் அரசு பொறியாளராக இருந்ததால் திமுகவின் உயர் பொறுப்புகளில் வளர்ந்தார். 1996 ம் ஆண்டு திமுக நெல்லை மாநகரத்தின் முதல் மேயராக உமாமகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால். அதிருப்தி அடைந்த சீனியம்மாள் அவரது குடும்பம் உமா மகேஸ்வரியை பலி வாங்க எண்ணியது.
பல வருடங்களாக காத்திருந்த சீனியம்மாள் மகன் கார்த்தியேகன் கடந்த 1 மாதமாக திட்டமிட்டு இந்த கொலையை திட்டமிட்டு செய்து இருக்கிறார். கடந்த 23 ம் தேதி உமாமகேஸ்வரி வீட்டிற்கு நடந்து வந்த கார்த்திகேயன் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் குடித்த அவர் கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை வைத்து சரமாரியாக குத்தியுள்ளார். சத்தம் கேட்டு வந்த கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோரையும் குத்திவிட்டு எந்த விததடயமும் இன்றி தப்பியுள்ளார்.
காவல்துறை முதல் கட்ட விசாரணையில் 100 பேர் அடங்கிய பட்டியலில் ஒருவராய் இருந்த கார்த்திகேயன் சிசிடிவி கேமரா மூலமும் அவரது வாகனம் மூலமும் தெளிவாக கண்டறியப்பட்டார். இதையடுத்து தூத்துக்குடியில் தலைமறைவாக இருந்து வந்த கார்த்திகேயன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட கார்த்திகேயன் ஆகஸ்ட் 19 ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.