Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்.. HMPV வைரஸ் வரை!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் தமிழகத்தில் பரவ தொடங்கிய HMPV வைரஸ் தொற்று நோய் வரை இன்றயை முக்கியமான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7) சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது.
சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவில் பரவி தற்போது தமிழகத்திலும் பரவியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஒருவரும், சேலத்தில் ஒருவரும் HMPV நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக இருப்பதாகவும் மருத்துவத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.