Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு பேசியதற்காக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது வரை இன்றயை செய்திகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று, ஆளுநர் உரை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. நாளை 11-ம் தேதி முதல்வர் பதிலுரை அளிப்பார். அத்துடன் சட்டப்பேரவை கூட்டம் நிறைவு பெறுகிறது.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.