Live : திமுக கண்டன பொதுக்கூட்டம் முதல்..‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றும் இளையராஜா வரை!
இன்று (மார்ச் 8) ஆம் தேதி முக்கியமான நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். அதனைத்தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மார்ச் 12ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது .
லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் உருவாக்கிய ‘சிம்பொனி’யை இசையமைப்பாளர் இளையராஜா இன்று அரங்கேற்றவுள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.