LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு முதல், அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் என பல்வேறு முக்கிய தகவல்களை இதில் காணலாம்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான மன்மோகன் சிங் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இவரது உடலுக்கு நாளை (டிச.28) பிற்பகலில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. தற்பொழுது, மன்மோகன்சிங் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆர்ப்பாட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.