Live: மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் வரை.!
மீனவர்கள் கைது முதல் மெட்ரோ ரயில் சேவை மாற்றம் வரை இன்றயை நாளின் முக்கிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது.
சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விமான நிலையம் – விம்கோ நகர் வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.
மேலும், வடோல்கேட் – விம்கோ நகர் டிப்போ வரை 6 நிமிட இடைவெளியிலும் விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.