LIVE : தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர் கைது முதல்…இஸ்ரோவின் 100வது ராக்கெட் வரை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டது முதல் இஸ்ரோ நாளை விண்ணில் எவவுள்ள 100-வது ராக்கெட் குறித்து வரை இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.

சென்னை : கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, விசைப்படகுடன் அவர்களை கைது செய்துள்ளது. இலங்கை காங்கேசன் கடற்பரப்பில் படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள், விசாரணைக்குப் பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை நாளை (ஜனவரி 29) காலை 6:23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவ உள்ளது. நாளை GSLV F15 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025