LIVE : நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., குமரி அனந்தன் மறைவு வரை.!
நீட் தேர்வு விலக்கு குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் , குமரி அனந்தன் மறைவு உள்ளிட்ட பல்வேறு செய்திகளில் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக் கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து ஆலோசிக்கவுள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக பங்கேற்காது என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார். 93 வயதான குமரி அனந்தன் வயது மூப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இயற்கை எய்தினார். குமரி அனந்தன், தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசையின் தந்தை என்பதும் குறிப்படத்தக்கது.