சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 12, 2025) நீதிமன்றம் தீர்ப்பை வழங்க உள்ளது.
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன இந்த சூழலில் , துபாய் செல்லும் இந்திய அணி பட்டியலில் வெளியாகியுள்ளது.
அதன்படி, கேப்டனாக ரோஹித் சர்மா, துணை கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யயாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
இங்கிலாந்து பவுலிங் :
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஆலோசனை நடத்தவில்லை :
கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார் என்று செய்திகள் வெளியானது. இதனை மறுத்து ஆலோசனை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
SayYEStoWomenSafety
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் தனது பெயர் அருகில் SayYEStoWomenSafety எனும் டேக் லைனை சேர்த்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
செங்கோட்டையன் ஆலோசனை :
கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரது ஆதரவாளர்கள் வந்துள்ளனர். இவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
தர்மமே வெல்லும்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என கூறியுள்ளார்.
இரட்டை இலை யாருக்கு?
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒர்க் ஃபர்ம் ஹோம்
ஆந்திராவில் பணிபுரியும் பெண்களுக்கு முழுக்க வீட்டில் இருந்து பணிபுரியும் வண்ணம் ஒர்க் ஃபர்ம் ஹோம் திட்டத்தை செயல்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!
பிணைக்கைதிகளை விடுவிக்காமல் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெய்ஸ்வால் வெளியே!
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக இந்திய அணியில் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
பும்ரா – அவுட்
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகியுள்ளார். பும்ராவுக்கு பதிலாக அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா விளையாட உள்ளார்.