சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர் செரியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கேள்வி நேரம் தொடங்கும். அதன் பின் அதிமுக சார்பில் சபாநாயகர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரப்படலாம். உடனடியாக அதை ஏற்கும்பட்சத்தில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்திச் செல்வார்.
தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த பலதடவை முயற்சி எடுத்துள்ளேன். ஆனால், நாங்கள் எடுத்த ஒவ்வொரு உன்னதமான முயற்சிக்கும் துரோகமும், பகையுமே பதிலாக கிடைத்தன. இருதரப்பு உறவை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம், பாகிஸ்தான் தலைமைக்கு வரும் என்று நிச்சயமாக நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
அன்புமணி கண்டனம் :
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜகவினர் போராடுவதற்கு முன்பே அவர்களை கைது செய்தது கண்டிக்கதக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாஜக அழைப்பு :
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதற்கு ஆதரவாக பேசிய திருமாவளவன் எங்களோடு போராட வேண்டும் என வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
வெற்றி தோல்வியை விட
வெற்றி தோல்வி என்பதை விட நாட்டு மக்களுக்கு இதனை கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் சபாநாயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
தமிழுக்கு இடமில்லை :
திருச்சி கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழை தவிர்த்து ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் என மொழி ஆசிரியர்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதை சுட்டிக்காட்டியுள்ளார் திமுக எம்.பி கே.என்.நேரு.
விசிக ஆதரவு :
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக பாஜகவினர் நடத்தும் போராட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின் :
டாஸ்மாக் ஊழல் முறைகேட்டில் முதல் குற்றவாளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2ஆம் குற்றவாளி செந்தில் பாலாஜி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வெளியேறினார் அப்பாவு :
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதால் அவர் தற்போது அவையை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறுகிறது.
சமரசம் :
அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்கமணி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணாமலை பதிவு :
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து தேதியே அறிவிக்காமல் போராட்டம் நடத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
போலீசார் குவிப்பு :
டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என பாஜகவினர் போராட்டம் நடத்த உள்ளதால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மனோஜ் பி.செல்வம் கைது :
இன்று டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தவுள்ளதாக கூறிய நிலையில் முன்னெச்சரிக்கையாக பாஜக பிரமுகர் மனோஜ் பி.செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீண்டும் புறக்கணிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், 2வது முறையாக இன்றும் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.