செப்.15 முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமல்!

Default Image

செப்டம்பர் 15ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது. 

இதுதொடர்பாக நகர் ஊரமைப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் 2022-2023 நிதி நிலை அறிக்கையில் திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல் மற்றும் மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக மாநில முழுமைக்கும் ஒற்றைச்சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டது.

இதற்குஏற்ப மனைப்பிரிவு உத்தேசங்கள் இணையதளம் வருகிறது. மூலமாக பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது, செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் கட்டிட உத்தேச அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த உத்தேச விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும் முறையினை நடைமுறைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்