ரூ.414 முதல் ரூ.1,118 வரை… சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு.! முதல்வர் ஸ்டாலின் பதில்.!
சிலிண்டர் விலை ரூ.414 முதல் ரூ.1,118 வரை உயர்ந்துள்ளதாக உங்களில் ஒருவன் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் எனும் நிகழ்வு மூலம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனது பதிலை அளித்து வந்தார். அப்படி இன்று அவர் வழங்கிய பதில்கள் வீடியோ வாயிலாக வெளியாகியுள்ளது. அதில் அவர் பல்வேறு கேள்களுக்கு அசராமல் பதில் கூறி வந்தார்.
அப்போது அவரிடம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என பாஜக கூறிவருகிறது, 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த போது சிலிண்டர் விலை 414 ரூபாயாக இருந்தது தற்போது 1,118.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.72.26 என இருந்தது, தற்போது ரூ.102.63 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் டீசல் விலை 2014இல் ரூ.55.49 இலிருந்து தற்போது ரூ.94.24 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதாக பாஜக கூறிவருவது, இத்தகைய வளர்ச்சியைத்தான் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார், மேலும் பாஜக 2014இல் ஆட்சிக்கு வந்த போது இந்தியாவிற்கு இருந்த கடன் தொகை 54 லட்சம் கோடியிலிருந்து 147 லட்சம் கோடி வரை உயர்ந்து 3 மடங்கு அதிகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.