சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்து இருந்த சூழலில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புது உடை அணிந்துகொண்டு பல இஸ்லாமியர்கள் பங்கேற்று ரமலானை கொண்டாடி வருகிறார்கள்.
மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.முன்னதாக மியான்மரின் இராணுவ அரசு மார்ச் 30, 2025 அன்று அறிவித்தபடி, இறப்பு எண்ணிக்கை 1,644 ஆக இருந்தது, ஆனால் மார்ச் 31 நிலவரப்படி 1,700 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் 3,408 பேர், காணாமல் போனவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
117 டார்கெட் :
மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 16.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இம்பேக்ட் பிளேயர் ரோஹித்
இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை vs கொல்கத்தா
ஐபிஎல் 2025-ல் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
புத்தொழில் களம்
தூத்துக்குடி இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.10 லட்சம் நிதியுதவியானது புத்தொழில் களம் திட்டத்தின் கீழ் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
தீ விபத்து :
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் மர நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் மிக அருகில் இருப்பதால் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செல்லூர் ராஜு பேட்டி
செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க., நாங்க ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார்.
விஜய்க்கு எதிரி :
விஜய் திமுகவுக்கு எதிரி என்றால் நான் விஜய்க்கு எதிரி. அரசியல் ரீதியாக மட்டும். இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதலமைச்சர் தான் பாதுகாப்பு தரணும் என பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.
தங்கம் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.67,400க்கும் ஒரு கிராம் ரூ.8,425க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரம்ஜான் கொண்டாட்டம்!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை கரும்புக்கடை பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இபிஎஸ் வாழ்த்து!
இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்