பிரதமர் மோடி முதல்… தவெக தலைவர் விஜய் வரை.! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

அரசியல் களத்தில் பிரதமரும், முதல்வரும் இருவேறு துருவங்களாக இருந்தாலும், முதல்வருக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

vijay - stalin - pm modi

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி என பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் களத்தில் பிரதமரும், முதல்வரும் இருவேறு துருவங்களாக இருந்தாலும், முதல்வருக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்.”தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில்,”தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. மு.க ஸ்டாலினுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அரசியலமைப்பின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் நாம் அனைவரும் இணைந்து போராடுவோம். நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “எனது சகோதரரும் தமிழக முதல்வருமான திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய்

தவெக கட்சித் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.என்.ரவி

தமிழில் கையெழுத்திட்டு தமிழிலேயே வாழ்த்து கூறியுள்ள தமிழ்நாடு ஆளுநர் தமிழில் வாழ்த்து ஆர்.என்.ரவி,”தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் மும்மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்