live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகள் கீழே நேரலையில் கொடுக்கப்பட்டு வருகிறது.

live rn ravi

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது என உதகையில் ஏப்ரல் 25, 26, 27, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் துணைவேந்தர்கள் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இந்த மாநாடு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில, மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இந்த இரண்டு நாள் மாநாட்டில், உயர்கல்வியில் ஆராய்ச்சி, நிறுவன மேம்பாடு, தொழில்முனைவு, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, மற்றும் உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவிப்பது போன்ற தலைப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.

துபாய் மற்றும் ஸ்பெயின் தொடர்ந்து நேற்று பெல்ஜியமில் நடைபெற்ற 12மணி நேர ரேஸ் ல அஜித்குமார் & அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், கார் பந்தயத்தில் இந்தியாவின் பெருமைமிக்க தருணம் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து அஜித் அணி சான்ட்வூர்ட், மிசானோ, நியூர்பர்க்ரிங், மற்றும் பார்சிலோனா ஆகிய பந்தயங்களில் பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 of 1
மணிகண்டன்

மு.க.ஸ்டாலின் – இபிஎஸ் :

  • நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி எனக் கூற தைரியம் இருக்கிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எங்கள் கூட்டணியை பார்த்து முதலமைச்சர் பயப்படுகிறார் என இபிஎஸ்-ம் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுப்பட்டனர்.
  • மணிகண்டன்

    காங். எம்எல்ஏ-வுக்கு சிறை :

  • கன்னியாகுமாரி பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்கும் பணியில் ஈடுப்பட்ட அரசு அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கிள்ளியூர் தொகுதி காங். எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • மணிகண்டன்

    விஜய் இரங்கல் : 

  • கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • மணிகண்டன்

    பிரதமர் மோடி இரங்கல் :

  • கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • பால முருகன்

    வானிலை அப்டேட்

  • தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • கெளதம்

    சஸ்பெண்ட் செய்ய ஆணை

  • ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஒழுங்கீனமான காவலர்கள் மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
  • கெளதம்

    உள்ளூர் விடுமுறை

  • கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் தினமான மே12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
  • மணிகண்டன்

    நிலச்சரிவு 3 பேர் பலி!

  • ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில், கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகள் வாகனங்கள் மண்சரிவில் புதைந்து 3 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணியில் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.
  • மணிகண்டன்

    கடலூர் – சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

  • கடலூர் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் முந்திரி தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற நேரு, கல்பனா, சரண்யா ஆகிய மூவரும் உயிரிழந்தனர்
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்