live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!
இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகள் கீழே நேரலையில் கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது என உதகையில் ஏப்ரல் 25, 26, 27, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் துணைவேந்தர்கள் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இந்த மாநாடு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில, மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இந்த இரண்டு நாள் மாநாட்டில், உயர்கல்வியில் ஆராய்ச்சி, நிறுவன மேம்பாடு, தொழில்முனைவு, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, மற்றும் உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவிப்பது போன்ற தலைப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.
துபாய் மற்றும் ஸ்பெயின் தொடர்ந்து நேற்று பெல்ஜியமில் நடைபெற்ற 12மணி நேர ரேஸ் ல அஜித்குமார் & அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், கார் பந்தயத்தில் இந்தியாவின் பெருமைமிக்க தருணம் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து அஜித் அணி சான்ட்வூர்ட், மிசானோ, நியூர்பர்க்ரிங், மற்றும் பார்சிலோனா ஆகிய பந்தயங்களில் பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.