Live : பிரதமர் மோடி – டிரம்ப் சந்திப்பு முதல்.., தமிழக அரசியல் நிகழ்வுகள் வரை..,
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் முதல் , தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு என பல்வேறு அரசியல் நிகழ்வுகளை இதில் காணலாம்.

சென்னை : அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு வர்த்தக உறவுகள் முதல் பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக் கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவரான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சிஆர்பிஎப் வீரர்கள் , காவலர்கள் என மொத்தம் 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.