Live : தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் முதல்..கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா வரை!
தமிழகத்தில் வரும் 17,18 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் முதல் ஆதவ் அர்ஜுனா விசிக கட்சியில் இருந்து விலகியது வரை இன்றைய முக்கிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு 12 முதல் 20 செமீ வரை கனமழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, பக்கதர்கள் சிலர் அவர் உள்ளே செல்லக்கூடாது என கரகோஷமிட்ட நிலையில், விதிமீறல்கள் இருப்பதாக வெளியே செல்லும்படி கூறிய ஜீயர்கள் கூறிய நிலையில், இளையராஜா கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார்.