Live : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் முதல்…ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் வரை!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் முதல் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வரும் தகவல் வரை முக்கியமான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : இன்று (18-12-2024) வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதன் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காத மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரிராஜ் சிங் உள்ளிட்ட 20 பாஜக எம்பிக்களுக்கு கட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.