இனிமேல் இங்கு பணி புரிபவர்கள் முழுமையாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் – தமிழக அரசு
அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முழு நேரமும் முறையாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முழு நேரமும் முறையாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.