இனி தமிழ்நாட்டை வறுத்தெடுக்கும் கோடை வெயில்..!

summer heat

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 12 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது.

நடப்பாண்டில் முதன்முறையாக சென்னையில் நேற்றைய தினம் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும்,சென்னையில் இந்த ஆண்டில் முதன் முறையாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் மதிய நேரத்தில் வெளியில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகமாக குடித்து வெயிலுக்கு தகுந்த உணவை உண்டு உடலை காக்க வேண்டியது அவசியமான ஒன்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்