இனிமேல் அனுமதி பெறாமல் வீடு காட்டினால் இடித்து அகற்றப்படும் – அமைச்சர் முத்துசாமி
இனி வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு என அமைச்சர் முத்துசாமி பேட்டி.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தமிழகத்தில் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினால் இடித்து அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இனி வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு. கட்டிட உரிமையாளர்களை விட, பொறியாளர்களுக்கு தான் இந்த பொறுப்பு உள்ளது.
கட்டிட வரைபட அனுமதி தேவை என்பதை பொதுமக்களுக்கு தெரியவில்லை .இது குறித்து அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. ஆனால் கட்டிட வரைபடம் அனுமதி மிக முக்கியமானது. இது பொது மக்களுக்கு பாதுகாப்பானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.