இனிமேல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டை இதில் தான் வாங்கி செல்ல வேண்டும்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாக முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தரிசனம் செய்த பின் லட்டு பிரசாதம் வாங்கி செல்வது வழக்கம். அந்த வகையில் கோவிலுக்கு செல்பவர்களுக்கு லட்டு பிரசாதம் என்பது முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் பிரசாதத்தை வாங்கி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால் இனிமேல் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாக முடிவு செய்துள்ளது.
தயார் செய்யப்பட்ட ஓலை பெட்டிகளை கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஓலை பெட்டிகள் 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய மூன்று விலைகளில் மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை பக்தர்கள் வாங்கி செல்லலாம் என கூறப்படுகிறது.