இனிமேல் இந்த மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் மது..!
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுபான கடைக்கு வரும் வாடிக்கையாளர் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய உத்தரவு.
தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால், அரசு தடுப்பூசி முகாம் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகமும் தங்கள் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடை பணியாளர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
எனவே, மதுபான கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சரிபார்த்த பின்னரே மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வாடிக்கையாளருக்கு மதுபானம் விற்பனை செய்தல் கூடாது எனவும் கடை பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மதுபான கடையின் முகப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வாடிக்கையாளருக்கு மட்டுமே இங்கு மதுபானம் விற்பனை செய்யப்படும் என்ற வாசகம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.