நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்யும்…!ககன்தீப் சிங் பேடி
நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்யும் என்று கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறுகையில், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளது.வீராணம், பெருமாள், வாலாஜா ஏரிகளில் நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் தங்க வைக்கப்படும் முகாம்களில் உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.