மே 7ம் தேதி முதல் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம்!
பொதுமக்கள் குறைகளை கண்டறிந்து உடனடி தீர்வு காணும் வகையில் வரும் மே 7ம் தேதி மக்களைத் தேடி மேயர் திட்டம் தொடக்கம்.
சென்னை மாநகராட்சி 2023 – 24ம் பட்ஜெட் கூட்டத்தொடரில், ‘மக்களைத் தேடி மேயர் திட்டம்’ செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பொதுமக்கள் குறைகளை கண்டறிந்து உடனடி தீர்வு காணும் வகையில் வரும் மே 7ம் தேதி ராயபுரம் மண்டலத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மேயர் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.