Live : பாஜகவில் இணைந்த கைலாஷ் கேலோட் முதல்…அதிமுகவுக்கு ‘NO’ சொன்ன தவெக வரை..!
இன்றைய நாளின் முக்கிய செய்தித் துளிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது....
சென்னை : ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த கைலாஷ் கேலோட். நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகி, ஒரே நாளில் பாஜகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் வட்டாரத்தில், அதிமுக தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில், ‘திமுகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுகவுடன் கூட்டணி குறித்த இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது எனவும்’, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.