மன்னர்கள் முதல் காமராஜர் வரை! தவெக மாநாட்டில் அணிவகுக்கும் கட்-அவுட்கள்!
நாளை மறுநாள் நடைபெறவுள்ள த.வெ.கவின் முதல் மாநாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்டவுட்களும் இடம் பெற்றுள்ளது வியப்பை ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம் : விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடானது நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இதற்கான, ஏற்பாடுகள் முடிவடையும் நிலையை எட்டி இருக்கிறது. மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும், சிறிய சிறிய விஷயங்கள் கூட கிடைக்க வேண்டுமென நுணக்கமான பணிகளை அக்கட்சி பணியாளர்கள் செய்து கொண்டே வருகின்றனர்.
அணிவகுக்கும் கட்-அவுட் :
இதன் விளைவாக, கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் மாநாடு நடக்கும் இடத்தில் சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்காலிக டவர் வரை அமைத்துள்ளனர். இப்படி பணிகள் ஒரு பக்கம் நடைபெறுகையில், மறுபக்கம் பிரம்மாண்டமான கட் அவுட்கள் அமைக்கப்பட்டு நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
அதாவது, முன்னதாக கல்வி கண் திறந்த காமராஜர், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மற்றும் கட்சி தலைவர் விஜய் ஆகியோரின் பெரிய அளவிலான கட்-அவுட் வைக்கப்பட்டது. தற்போது, அந்த கட் அவுட்களுடன் புதிதாக வேலுநாச்சியார் மற்றும் ‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என்று அழைக்கப்படும் அஞ்சலை அம்மாள் ஆகிய வீர மங்கைகளின் கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது மேலும் நம்மை வியப்படைய வைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருகையில் அடுத்ததாக சேர, சோழ பாண்டிய மன்னர்களின் கட்-அவுட்டும் மாநாட்டில் அணிவகுத்துள்ளது.
கட்-அவுட் அணிவகுக்கும் இடம் :
மேடையின் இடது புறமாக 50 அடியில் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், காமராஜர், பெரியார் மற்றும் விஜய் இவர்களின் கட்-அவுட் அணிவகுத்துள்ளது.
அதே போல மேடையின் வலது புறத்தில் தமிழ் அன்னை, சேரர், சோழர், பாண்டிய மன்னர்கள் மற்றும் விஜய் இவர்களின் 50அடி கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பெரும் பல தலைவர்கள் கட்-அவுட் இடம்பெறும் முதல் மாநாடாக இந்த தமிழக வெற்றி கழக மாநாடு அமைந்துள்ளது.
அதன்படி, அழகு முத்துகோன், வீரபாண்டிய கட்டபொம்மன், பெரும்பிடுகு முத்தரையர், சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, பூலித்தேவர், மருது சகோதரர்கள் மற்றும் ஒண்டி வீரன் என தமிழ் நாட்டில் சுதந்திரத்திற்கு போராடிய முக்கிய தலைவர்களின் கட்-அவுட்டும் முதல மாநாட்டை அலங்கரித்துள்ளது.
தமிழும் ..தவெகவும் ..!
இதைத் தாண்டி நம் இந்திய நாட்டை உலகம் வரையில் விஞ்சான உலகில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க செய்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் கட்-அவுட்டும் இடம்பெற இருப்பதாக ஒரு தகவல் தெரியவந்துள்ளது. இவரைத் தொடர்ந்து, இன்னும் சில தலைவர்களின் கட்அவுட் மாநாட்டை அலங்கரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இவர்களின் கட்-அவுட்கள் இடம்பெற்றதை பார்க்கையில் தமிழகத்தில் ஒரு வித்தியாசமான கட்சியாக த.வெ.க செயல்பட உள்ளது என நமக்கு தெரிகிறது. மேலும், தமிழுக்கும் தமிழ் மக்களுக்காகவுமே த.வெ.க கட்சி முக்கியத்துவம் கொடுத்து செயல்பட உள்ளது என்பதை மாநாட்டில் இடம் பெற்றுள்ள நம் தலைவர்களின் கட்-அவுட்களை பார்க்கையில் நமக்குத் தெரிகிறது.