LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு உட்பட பல்வேறு உள்ளூர், சர்வதேச நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை வருகைபுரிந்த, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும், தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். அண்மையில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்பட்ட நிலையில், கிண்டியில் பதுங்கியிருந்த மகாராஜாவை போலீசார் இன்று (மார்ச் 21) சுத்துப்போட்ட நிலையில், அவர் தப்பி ஓடவே துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.