ஜூலை 10முதல் கலைஞர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தொடக்கம்… மா.சுப்ரமணியன்.!
கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் வரும் ஜூலை 15 முதல் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும் என தகவல்.
1000 படுக்கை வசதிகளுடன் 230 கோடி செலவில் 6 மேல் தளங்களுடன் கட்டப்பட்ட, கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் இந்த மாதம் ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டதை அடுத்து தினமும் பெருமளவில் மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர், இந்த நிலையில் இனி வரும் ஜூலை 10 ஆம் தேதி முதல் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.