“வீடுதோறும்…நாளை முதல் சனிக்கிழமை வரை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!

Default Image

தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி 9 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று 50,000 இடங்களில் 8 வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல்,மாலை 7 மணி வரை  நடைபெற்றது.குறிப்பாக,சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி 9 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும்,தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில்,தமிழகத்தில் இதுவரை 73% பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி, 35% பேருக்கு 2 வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் சனிக்கிழமை வரை வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும்.வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்,அப்போது மாநிலம் முழுவதும் 50,000 முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்