LIVE : நாளை ஈரோடு இடைத்தேர்தல் முதல்… பனிமூட்டத்தால் விமான சேவை பாதிப்பு வரை.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் வரை சென்னையில் நிலவும் பனி மூட்டம் வரை பல்வேறு அரசியல் நகர்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை மற்றும் புறநகர் ரயில் சேவை பாதிப்புள்ளாகியுள்ளது. மேலும், சென்னையில் தரையிரங்க வேண்டிய 6 விமானங்கள், பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத் நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
இதனிடையே, வட தமிழகத்தில் அடர்ந்த மூடுபனி காணப்படுகிறது. நாளை காலையிலும் இதே போன்ற பனிமூட்டத்தை எதிர்பார்க்கலாம்என்று தனியார் வானிலை ஆய்வாள பிரதீப் ஜான் கூறியுள்ளார்.