LIVE : திமுக ஆர்ப்பாட்டம் முதல்..டெல்லியின் புதிய முதலமைச்சர் அப்டேட் வரை!
இன்று (பிப்ரவரி 19)-ஆம் தேதி நடைபெறும் முக்கியமான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : தமிழ்நாட்டு மக்களிடம் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் வலிறுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் பலரும் மும்மொழி விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.
டெல்லி முதலமைச்சரை தேர்வு செய்யும் முன்பே ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இன்று யார் டெல்லி முதல்வர் யார் என்பதை தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக அறிவிக்கப்படவுள்ள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட அவர் நாளை டெல்லி முதலமைச்சர் பதவியேற்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.