LIVE : டெல்லி முதல்வர் முதல்…வாரணாசியில் சிக்கிய தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் வரை!
இன்று (பிப்ரவரி 20)-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறும் அரசியல் செயல்பாடுகள் முதல் கிரிக்கெட் செய்திகள் வரை நேரலை செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமீபத்தில் வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தார்கள், இப்போது போட்டிகள் முடிந்த நிலையில், அவர்கள் சென்னை திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஏனென்றால், கும்பமேளாவுக்கு சென்றவர்கள் முன்பதிவு செய்த ரயில் பெட்டியில் ஏறியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளி வீரர்கள் ரயிலில் ஏற முடியாததால் வாரணாசி ரயில் நிலையத்திலேயே காத்திருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.
டெல்லியில் 28-ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யபட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு முதல்வராக பதவியேற்கவுள்ளார்.