Live : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் முதல்… மக்களவையை ஒத்திவைக்க கனிமொழி எம்.பி. நோட்டீஸ் வரை!
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் உடனுக்குடன் காணலாம்.
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால், திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலச்சரிவில், கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 4 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார்-மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.
தற்பொழுது, மண்சரிவில் சிக்கிய ஒவ்வொருவரின் உடல்களாக மீட்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள இருவரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும். நிவாரணத்தை உடனடியாக வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் எனவும் மக்களவையை ஒத்திவைக்க வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.