சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை.. தஞ்சை, நெய்வேலியில் இருந்து விமான சேவை!

air service

தஞ்சையில் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சிறுநகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து முதற்கட்டமாக  20 இருக்கைகளுடன் விமான சேவை தொடங்கப்படுகிறது.

1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை – சென்னை விமான சேவை பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் உள்ளன என கூறப்படுகிறது. இந்த சேவை மூலம் சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயண்பெறலாம்.

அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு! அதிமுகவில் இணைந்த பாஜக முக்கிய நிர்வாகி!

இதுபோன்று உதான் திட்டத்தில் நெல்வேலியில் இருந்தும் சென்னைக்கு சிறுரக விமானம் சேவையும் அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. என்எல்சியில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இது செயல்பட்டு வந்தால் பெரும் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெய்வேலியில் விமான நிலையத்தில் ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், உதான் திட்டத்தில் வேலூரில் ரூ.65 கோடியில் சிறிய விமான நிலையம் கட்டப்பட்டு தயாராக உள்ளது. ஆனால், சிவில் போக்குவரத்து விமான இயக்குநரகத்தின் அனுமதிக்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்