Live : தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்… பல்வேறு முக்கிய நிகழ்வுகள் வரை…
முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை முதல் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் பற்றிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மினி டைடல் பார்க்கை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று தற்போது தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இங்கு புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், ஆளும் அரசை விமர்சனம் செய்தும் தவெக தலைவர் விஜய் கைப்பட ஒரு பரபரப்பு கடித்தை எழுதியுள்ளார்.அதில், கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என் அருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகிறேன். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை அமைத்தே தீர்வோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம். – உங்கள் அண்ணனாக பிரியமுடன் விஜய்.” என எழுதியுள்ளார்.