ஏப்ரல் 2 முதல் 15 வரை ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் – தமிழக அரசு.!
கொரோனா வைரஸ் அனைத்து நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல் மிரட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அறிவித்தார்.
இதையெடுத்து தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.1,000 வழங்குவது ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தேவையான மாஸ்க் , கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கவேண்டும் , மேலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தினமும் ரூ .200 -ஐ பயணம் , செலவினமாக வழங்க வேண்டும் என கூட்டுறவு துறை கூறியுள்ளது.
கொரோனா வைரஸால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 694 ஆக உள்ளது. இவர்களில் 15 பேர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.